அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
2005ல் இந்தியில் சல்மான்கான் நடித்த படம் நோ என்ட்ரி. அப்படத்தில் அவருடன் அனில்கபூர், லாரா தத்தா, பிபாசாபாசு ஆகியோரும் நடித்திருந்தனர். அப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்திலும் சல்மானுடன் முன்பு நடித்த அனில்கபூர், லாராதத்தா ஆகியோர் நடிக்க, சன்னி லியோன், இஷாகுப்தா உள்ளிட்ட மேலும் சிலரும் இணைந்துள்ளனர்.
மேலும், இப்படத்தில் மூன்று விதமான மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் சல்மான்கான். ஒவ்வொரு வேடத்திற்குமிடையே எந்தவொரு தொடர்பும் இல்லாத கெட்டப்பில் நடிக்கும் அவர், தனது உடல் எடையையும் குறைத்து, அதிகப்படுத்தி என மாறுபட்ட தோற்றங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, இதற்கு முன்பு வீர் என்ற படத்திற்கு திரைக்கதை எழுதிய சல்மான்கான், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு குத்துப்பாடலையும் எழுதியுள்ளாராம். 18 வயது இசையமைப்பாளர் பாலேஷ் என்பவரின் இசையில் இந்த பாடலை எழுதியிருக்கும் சல்மான்கான், அந்த பாடலில் சன்னிலியோன், லாரா தத்தாவுடன் இணைந்து செம குத்தாட்டம் போடவிருக்கிறாராம்.