14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
ரசிகர்களை, மச்சான் என்று செல்லமாக அழைக்கும் நமீதா இன்று(மே 10ம் தேதி) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குஜராத் மாநிலம், சூரத்தில் பிறந்தவர் நடிகை நமீதா. 2001-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில், நான்காம் இடம் பெற்ற நமீதா, விஜயகாந்த்தின் ''எங்கள் அண்ணா'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனது கவர்ச்சியான நடிப்பால் தமிழக ரசிகர்களை கொள்ளை கொண்டார் நமீதா. மேலும் 'மச்சான்ஸ்' என்ற ஒரே வார்த்தையால் தமிழக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் இவர். தற்போது சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக கடை திறப்பு விழா, சினிமா விழாக்கள், டி.வி. நிகழ்ச்சியில் நடுவர் என்று தன்னை எப்போதும் அடையாளம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகை நமீதா இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நமீதா...! நமீதாவின் 'மச்சான்ஸ்' எல்லாம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்!!