பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவர் முதல் படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசி நடித்திருந்தார். அதையடுத்து விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் அஞ்சலியுடன் சேர்ந்து இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். ஆனால், முதல் படமே வெற்றி பெறவில்லை.இரண்டாவது படமோ இன்னும் கிடப்பில் கிடக்கிறது.
அதனால், பெரிய அளவில் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வரலட்சுமியின் கோலிவுட் சினிமா மார்க்கெட் டல்லடித்ததால், கன்னடத்தில் சுதீப்புடன் மாங்கியா என்ற படத்தில் நடித்தார். அப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக, வரலட்சுமிக்கு முதல் வெற்றி கன்னடத்தில்தான் கிடைத்திருக்கிறது.
இதையடுத்து, அங்கு அவருக்கு புதிக படங்கள் கமிட்டாகத் தொடங்கியிருக்கிறதாம். அதனால். கன்னட சினிமா மீது பெரிய நம்பிக்கை இல்லாமல் நடித்த வரலட்சுமிக்கு இந்த ஹிட்டுக்கு பிறகு பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால், தன்னைத்தேடி வரும் கம்பெனிகளிடம் தீவிரமாக கதை கேட்பதிலும் இறங்கியிருக்கிறார் வரலட்சுமி.