ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் தனது ரேஞ்ச் எகிறப்போகிறது என்று ரொம்பவே நம்பிக்கொண்டிருந்தார் ஆண்ட்ரியா. ஆனால் அதன்பிறகும் அதே கமல்தான்விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் என இரண்டு படங்களில் ஆண்ட்ரியாவுக்கு சான்ஸ் கொடுத்துள்ளார். அதையடுத்து தரமணி, புதிய திருப்பங்கள், அரண்மனை, வலியவன் என சில படங்களில் பிரபலமில்லாத நடிகர்களுக்கு ஜோடியாகத்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதனால் மேல்தட்டு ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ந்து கல்லெறிந்து வந்த ஆண்ட்ரியா, விஷாலுடன் லட்சுமிமேன்ன, இனியா போன்ற நடிகைகளெல்லாம் நடிக்கும்போது நமக்கு சான்ஸ் கிடைக்காதா? என்று அவர் நடிக்கும் புதிய படங்களில் சான்ஸ் கேட்டு படையெடுத்தார். அதன்விளைவாக, விஷாலை வைத்து பூஜை படத்தை இயக்கும் டைரக்டர் ஹரி, ஒருநாள் ஆண்ட்ரியாவுக்கு அழைப்பு விடுத்தாராம்.
அப்படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் நடித்தபோதும, ஒருவேளை இன்னொரு நாயகி வேடத்துக்கு அழைக்கிறாரோ என்று ஓடோடிச்சென்றாராம் ஆண்ட்ரியா. ஆனால் அங்கு சென்றபிறகுதான் அது ஒரு பாட்டுக்கு நடனமாடும் வாய்ப்பு என்று தெரிந்திருக்கிறது. ஆனபோதும், பெரிய டைரக்டர் அழைப்பை மறுக்கக்கூடாது என்று விஷாலுடன் நறுக் ஆட்டம் போட ஓ. கே சொல்லியிருக்கிறாராம் ஆண்ட்ரியா.
இதே பூஜை படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசனும், கவர்ச்சியில் வள்ளல் பரம்பரை என்பதால், ஆண்ட்ரியாவும் தன்பங்குக்கு போட்டா போட்டியில் குதிக்கிறாராம்.