ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் வெளியான அமேசிங் ஸ்பைடர்மேன் -2 இந்தியாவில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. கோடை விடுமுறையில் வெளியாகி இருக்கும் இந்தப் படம் குழந்தைகளின் பேவரைட் சம்மர் பாயிண்டாக மாறியிருக்கிறது. இந்தியாவில் சோனி நிறுவனம் ஸ்பைடர் மேனை 1500 தியேட்டர்களில் வெளியிட்டது. 2டி, 3டி தொழில்நுட்பங்களிலும், ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் வெளியிட்டது.
வெளியான 4 நாட்களிலேயே 41 கோடியே 7 லட்சத்தை வசூலித்துள்ளது. சாராசரியாக ஒரு நாளைக்கு பத்து கோடியை அள்ளுகிறது. ஸ்பைடர் மேனின் மொத்த வசூல் 200 கோடியை தாண்டும் என்கிறார்கள். இந்தியில் சமீபத்தில் வெளியான 2 ஸ்டேட்ஸ் திரைப்படம் ஒரு வாரத்தில்தான் 41 கோடி வசூலித்துள்ளது.
படத்தின் வசூலை கண்ட சோனி நிறுவனம் இனி ஸ்பைடர் மேனின் அனைத்து பாகத்தையும் இந்தியாவில் வெளியிடும் பிரமாண்ட ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட இருக்கிறது.