ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் ஸ்ரீராம். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கோலிசோடா அவருக்கு மற்றுமொரு உயரத்தை கொடுத்தது. ஸ்ரீராமுக்கு தற்போது 18 வயது நிறைவடைந்து விட்டது. அவர் அப்பா சிவராமகிருஷ்ணன் இயக்கும் தரை டிக்கெட் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். சினிமா பற்றி எதுவும் தெரியாமல் கிராமத்திலிருந்து வரும் ஒருவன் எப்படி வெற்றி பெற்ற சினிமா டைரக்டராகிறான் என்கிற கதையாம்.
இதுதவிர எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் ராம்கி இயக்கும் கமர்கட்டு படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தயாரிப்பு நிர்வாகி செல்வம் என்பவர் தயாரித்து இயக்கும் இந்த படத்தை பாக்காதீங்க (படத்தோட தலைப்பே அதாங்க) என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றும் ஸ்ரீராம் சொல்கிறார்.