ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஜீவிதா, சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சட்டமன்ற சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்றாலும் அந்தக் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நரேந்திர மோடியை ஜீவிதா தன் கணவர் நடிகர் டாக்டர் ராஜசேகர் மற்றம் இரண்டு மகள்களுடன் சந்தித்தார்.
அப்போது தான் தேர்தல் பிரச்சாரம் செய்த வீடியோவை லேப் டாப்பில் பதிவு செய்து காட்டினார். பின்னர் 20 நிமிடங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜீவிதாவின் மகள்கள் நரேந்திர மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இந்த சந்திப்பின் போது பா.ஜ.கவின் மூத்த தலைவர் வெங்கயா நாயுடு உடன் இருந்தார். ராஜ்ய சபா சீட் பெற்று விட வேண்டும் என்பதற்காக நரேந்திர மோடியை ஜீவிதா குடும்பத்துடன் சந்தித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.