ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சுமார் 500 படங்களுக்கு மேல் இசையமைத்தநிலையில், கடந்த சில வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் இருந்தார் இசையமைப்பாளர் தேவா, அவருக்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் பெயர் டம்மி டப்பாசு, சென்னையின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் இது. எனவே டம்மி டப்பாசு படத்தில் இடம்பெறும் அத்தனை பாடல்களும் கானா பாடல்கள். கானா பாடல்களில் நிபுணரான தேவா இசையமைத்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து அவரை கமிட் பண்ணினார்களாம். தன்னைத்தேடி வந்தவர்களை தேவா ஏமாற்றவில்லை. டம்மி டப்பாசு படத்தில் இடம்பெறும் அத்தனை பாடல்களையும் வெரைட்டியான கானாவில் கலக்கி இருக்கிறார் தேவா.இந்தப்பாடல்கள் கண்டிப்பாக சூப்பர்ஹிட்டாகும். தனக்கு மறுபடியும் ஒரு பிரேக் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறார் தேவா.
வாங்க தேவா சார் வந்து கலக்குங்க