ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஸ்வரூபம்-2 படத்தை முடித்து விட்ட கமல், தற்போது, தன் நண்பரும், கன்னட நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும், உத்தமவில்லன் படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். இப்படத்தில், 21ம் நூற்றாண்டை சேர்ந்தவராக, ஒரு கெட்டப்பில் நடிக்கும் கமல், அதில் மனோரஞ்சன் என்றொரு சினிமா ஸ்டாராகவே நடிக்கிறார். அந்த வகையில், வீர விளையாட்டு என்றொரு படத்தை கமலை வைத்து கே.பி., படமாக்குகிறாராம். அந்த படத்துக்காக, அந்த காலத்து வீர விளையாட்டு கலைஞர்களைப் போன்று, காளையை அடக்குவது,பாறாங்கல்லை தூக்குவது, உள்ளிட்டபல சாகசங்களை செய்வது போன்றும் நடித்துள்ளாராம், கமல்.