ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தலைவா படத்திற்கு பிறகு விஜய் இயக்கி உள்ள படம் 'சைவம்'. இது அவரது வழக்கமான படங்களிலிருந்து வித்தியாசமாக உருவாகி உள்ள படம். காரைக்குடி செட்டிநாட்டு பெரிய மனிதர் நாசர். ஊர் கோவில் திருவிழாவிற்கு பல்வேறு ஊர்களில் பணி செய்யும் அவரது மகன், மகள்கள் தங்கள் குடும்பங்களோடு காரைக்குடி வருகிறார்கள். அவர்களில் பேத்தி சாரா மீது நாசருக்கு பாசம் அதிகம்.
நகர்புறத்தில் வளர்ந்த சாராவுக்கு நாசர் கிராமத்தை பற்றிச் சொல்கிறார். திருவிழாவையொட்டி கிடா விருந்து நடக்கிறது. சாராவுக்கு அங்கு வளரும் ஒரு சேவல் மீது பாசம் அதிகம். அதை விரட்டிப் பிடித்து தூக்கி கொஞ்சுகிறாள். ஒரு விருந்தில் சேவலும் பலியாக போகிறது என்பதை உணரும் சாரா ஒரு காரியம் செய்கிறாள். அந்த காரியத்தால் எல்லோருமே சைவமாக மாறிவிடுகிறார்கள். இதுதான் படத்தின் கதை.
நாசர் தாத்தாவாகவும், நாசர் மகன் லுக்புதீன் பாஷா மூத்த பேரானகவும், சாரா பேத்தியாகவும், நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கான பின்னணி இசை ஹாலிவுட்டில் சேர்க்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயண்ட் மூவீஸ் வாங்கி உள்ளது. "ரெட் ஜெயண்ட் மூவீஸ் நல்ல படங்களை தேடிப்பிடித்து வாங்கி வருகிறது. அந்த வகையில் சைவம் வாங்கியது குறித்து மகிழ்ச்சி. நல்ல கருத்தை சொல்லும் இந்தப் படத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்ல ரெட் ஜெயண்ட் வேகமாக செயல்படும். விஜய்யுடன் கைகோர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.