ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும் இடம் பொருள் ஏவல் படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதி ஜோடியாக மனீஷா யாதவ் நடிப்பதாக இருந்தது. கொடைக்கானலில் ஷப்ட்டிங் தொடங்கிய நிலையில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை மனீஷாயாதவ் படத்திலிருந்து விலகிக் கொண்டார். அவருக்கு பதிலாக நந்திதா ஒப்பந்தமானார். இன்னொரு ஜோடிய விஷ்ணுவும், ஐஸ்வர்யாவும் நடிக்கிறார்கள்.
தற்போது கொடைக்கானலில் நடந்து வந்த முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. அங்கு விஜய்சேதுபதி, நந்திதா, வடிக்கரசி, இளவரசு, பூ ராம், தீப்பெட்டி கணேசன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் மதுரையில் நடக்கிறது. அதில் விஷ்ணு, ஐஸ்வர்யா, பாலா நடிக்க இருக்கிறார்கள். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. அதில் விஜய் சேதுபதியும், விஷ்ணுவும் இணைந்து நடிக்கிறார்கள்.