யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் அடிபட்டு திடீரென்று நடிகை ரஞ்சிதா காணாமல் போனதில், ஏக அப்செட்டில் இருக்கிறார் மணிரத்னம். காரணம் விரைவில் வெளியாக உள்ள அவரது ராவணன் படத்தில் ரஞ்சிதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னும் சில காட்சிகள் பாக்கியிருக்கும் நிலையில் ரஞ்சிதா தலைமறைவாகிவிட்டதால், ஏற்கெனவே பல சோதனைகளைச் சந்தித்த மணிரத்னம் டென்ஷனின் உச்சத்துக்கே போய் விட்டாராம். ரஞ்சிதா 1992ல் பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, அர்ஜுனுடன் கர்ணா, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். ரஞ்சிதாவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. எனவே தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் அவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்தார். இங்கு அவருக்கு 3 வீடுகள் உள்ளனவாம். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, ஹபிபுல்லா சாலை வீட்டில் வசித்தார் ரஞ்சிதா. திருமணத்துக்குப் பின் மீண்டும் சில படங்கலில் நடித்தார். சினிமாவில் அவரை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார். மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியான போது, அவற்றை ஒரேடியாக மறுத்த ரஞ்சிதா, "எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக் கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார். இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. இந்தக் காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த சம்மரில் ராவணாவை வெளியிடும் நோக்கத்தில் பரபரப்பாக இயங்கிவரும் மணிரத்னம் ராவணா பட விஷயமாக ரஞ்சிதாவைத் தொடர்பு கொள்ள முடியாததால் டென்ஷனில் இருக்கிறார். ரஞ்சிதா விவகாரம் படத்தை பாதித்துவிடுமோ என்றும் கவலையில் உள்ளார். காரணம் இது மணிரத்னத்தின் சொந்தப்படம். ரஞ்சிதா விவகாரத்தோடு சேர்த்து 14 பெரிய பிரச்சினைகளை ராவணா படம் எதிர்கொண்டுள்ளதாம்.