மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விஜயசேதுபதிக்கு ஜோடியாக பீட்சா படத்தில் ரம்யா நம்பீசனும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரியும், சூதுகவ்வும் படத்தில் சஞ்சிதா ஷெட்டி, இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் நந்திதா என பல நடிகைகளுடன் நடித்து விட்டார் விஜயசேதுபதி. ஆனால் அப்போதெல்லாம் அவரை எந்த நடிகையுடனும இணைத்து கிசுகிசுக்கள் பரவவில்லை.
ஆனால், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் ஐஸ்வர்யாவுடன் நடித்தபோது கிசுகிசுவில் சிக்கிக்கொண்டார். அதையடுத்து, இப்போது சீனுராமசாமி இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்திலும் ஐஸ்வர்யா இருக்கிறார். ஆனால், மீண்டும் அவருடன் நடித்தால் கிசுகிசுக்கள் இன்னும் எகிறிவிடும் என்று அவரை அதே படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கும் விஷ்ணுவுக்கு ஜோடியாக்கி விட்டனர்.
ஆக, இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நந்திதா நடிக்கிறார். ஏற்கனவே அவர்கள் நடித்த இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அவர்களது காம்பினேஷன் நன்றாக ஒர்க்அவுட்டானதால், இப்படத்திலும் அவர்களை முக்கியமான வேடங்களில் நடிக்க வைத்துள்ளார் சீனுராமசாமி. முந்தைய படத்தில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்காத அவர்கள் இந்த படத்தில் அந்த படத்துக்கும் சேர்த்து ரொமான்ஸ் செய்கிறார்களாம்.
அதனால், இந்த படத்திற்கு பிறகு விஜயசேதுபதியுடன் நந்திதாவை இணைத்து மீண்டும் கிசுகிசுக்கள் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.