வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
புதியவர்கள் இணைந்து, 'நீ என் உயிரே' என்ற படத்தை தயாரித்துள்ளனர். நல்ல பெண்களால் குடும்பங்கள் காப்பாற்றப்படும், கெட்ட பெண்களால் குடும்பங்கள் அழியும் என்ற கருத்தை மையமாக கொண்டு படம் தயாராகி இருக்கிறது. கதையும் தலைப்பும் நன்றாக இருந்தாலும் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்தான் படு ஆபாசமாக இருந்திருக்கிறது. படத்தில் பாட்டைப் பார்த்த தணிக்கை குழுவினர் அதிர்ச்சியில் மயங்கி விழாத குறைதான்.
"சிங்கப்பூரில் பொறந்தவ, சிட்னியில வளர்ந்தவ, தமிழ்நாட்டு பார்டர்ல திமிரு புடிச்சு அலைஞ்சவ..." என்ற பாடலுக்கு பெங்களூரு மாடல் அழகி சந்தனா ஆடியிருந்தார். பாட்டை அப்படியே வெட்டிட்டு ரிலிஸ் பண்ணுங்க என்று சொல்லி தணிக்கை சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். தயாரித்து ஹீரோவாக நடித்திருப்பர் நவரசன் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் வைஷாலி என்ற புதுமுகம். தணிக்கை குழு வெட்டிய பாடலை எழுதியவர் பிறைசூடன், இசை அமைத்திருப்பவர் ஜீவன் ஆண்டனி. சம்பந்தப்பட்ட பாடல் காட்சியின் படங்களை கூட வெளியிடவில்லை.