படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |
தேசிய திரைப்பட விருது பெற்ற தமிழ்பட கலைஞர்கள் தங்களின் மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள். இதோ அந்த சந்தோஷ வார்த்தைகள்.
இயக்குனர் ராம் (தங்க மீன்கள்)
விஞ்ஞானம் வளர்ந்தாலும், நாகரீகம் சிதைந்தாலும் உறவுகள் இன்னும் மாறவில்லை. அதைத்தான் இந்த விருது உணர்த்துகிறது. தந்தை மகள் உறவுக்கு கிடைத்த தேசிய அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறேன். மக்களாலும், விருதுகளாலும் தங்க மீன்கள் கொண்டாடப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது கிடைத்ததை விட என் தயாரிப்பாளர் கவுதம் மேனன், பாடலாசிரியர் நா.முத்துகுமார், குழந்தை சாதனாவுக்கு விருது கிடைத்ததுதான் பெரிய மகிழ்ச்சி. ஒரே நேரத்தில் எனக்கும் என் குருநாதர் பாலுமகேந்திராவுக்கும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.
பாடலாசிரியர் நா.முத்துகுமார் (ஆனந்த யாழை மீட்டுகிறாய்.... தங்க மீன்கள்)
நான் எத்தனையோ பாடல்களை எழுதியிருந்தாலும் என் மனசுக்கு நெருக்கமான பாடல் ஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளை பெற்ற ஒவ்வொரு தந்தையும் நேசித்த பாடல். அந்த பாடலுக்கு விருது கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் தரமான பாடல்களை தரவேண்டும் என்கிற பொறுப்பை என் தோள் மீது சுமத்தியிருக்கிறது. இந்த விருதை இயக்குனர் ராமின் மகளுக்கும், எனது மகனுக்கும் சமர்பிக்கிறேன்.
தயாரிப்பாளர் சசிகுமார் (தலைமுறைகள்)
பசங்க படத்திற்காக முதன் முறையாக தேசிய விருது வாங்கினேன். இப்போது இரண்டாவது முறையாக வாங்கப்போகிறேன். தலைமுறையை தயாரித்ததில் என் தலைமுறைக்கே பெருமையாக நினைக்கிறேன். தலைமுறையை ஒரு படமாக பார்க்கவில்லை. ஒரு பதிவாகத்தான் பார்க்கிறேன். இந்த விருதுக்கு சொந்தக்காரர் பாலுமகேந்திரா சார்தான். அவர் உயிரோடு இருந்திருந்தால் இரட்டிப்பு சந்தோஷம் இருந்திருக்கும்.
எடிட்டிர் சாபு ஜோசப் (வல்லினம்)
ஆண்மை தவறேல் எனது முதல் படம் வல்லினம் மூன்றாவது படம். மூன்றாவது படத்திலேயே தேசிய விருது என்பது என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம். வல்லினம் படத்தின் கதை கூடைப்பந்து போட்டியை மையமாக கொண்டது. அதில் நான்கு விளையாட்டு போட்டிகள் வரும் நான்கும் நான்குவித சூழ்நிலையில் வரும் அதற்கேற்ப அதனை படம் பிடித்திருப்பார்கள். மொத்தம் 60 மணிநேர புட்டேஜை பார்த்து அதிலிருந்து தேவையான ஷாட்களை செலக்ட் செய்து கோர்த்தேன். கடுமையான உழைப்பு அது அந்த உழைப்புக்கான பரிசு இந்த விருது. தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாருக்கும், இயக்குனர் அறிவழகன் சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தை நட்சத்திரம் சாதனா (தங்க மீன்கள்)
சாதனா தற்போது இலங்கையில் இருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா வர இருக்கிறாள். அப்போது அவள் மீடியாக்களை சந்தித்து பேசுவாள் என்று தங்க மீன் டீம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த தருணத்தை என்னால் மறுக்கவே முடியாது. இந்தப்படத்தில் என்னை நடிக்க வைத்து, ஊக்கம் அளித்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் மற்றும் மீடியாக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.