மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கோச்சடையானில் நடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்தப்படியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். அதோடு, அப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்போது இன்னொரு ஹீரோயினாக இந்தி நடிகரும், ரஜினியின் நண்பருமான சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக தற்போது புதிய செய்தி ஒன்று கசிந்துள்ளது. இந்த செய்தியை ரஜினிதரப்போ, ரவிக்குமார் தரப்போ வெளியிடாதபோதும், சோனாக்ஷி சின்ஹா தனது சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டு தான் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.
அதில், முதன்முதலாக தமிழில் நடிக்கிறேன். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இப்படி சோனாக்ஷியே டுவிட் செய்திருப்பதால் இந்த செய்தி வதந்தியாக வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
ஏற்கனவே சோனாக்ஷி, கமல் ஜோடியாக விஸ்வரூபம் படத்திலேயே கமிட்டானார். ஆனால் அந்தப்படம் அப்போது ஆரம்பிக்க தாமதமானதால் அப்படத்திலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.