ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகே படத்தின் வெளியீட்டு தேதியை விளம்பரத்தில் பயன்படுத்த வேண்டும். தணிக்கை செய்த பிறகு படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் தணிக்கைக்குழுவினால் கொடுக்கப்பட்ட சான்றிதழ் விவரங்களை குறிப்பிட வேண்டும். அதாவது படத்துக்கு யு சான்றிதழோ அல்லது ஏ சான்றிதழோ என்ன சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அதை படத்தின் விளம்பரங்களில் குறிப்பிட்டாக வேண்டும் - என்பதை எல்லாம் விதிகளாக வைத்திருக்கிறது தணிக்கைக்குழு.
இதை ஏறக்குறைய எல்லா தயாரிப்பாளர்களும் பின்பற்றி வரும்நிலையில்... விஷால் நடித்து, தயாரிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டும், அப்படத்தின் விளம்பரங்களில் யுஏ என்ற தணிக்கைகுழுவின் சான்றிதழ் விவரம் குறிப்பிடப்படவில்லை. இது தணிக்கை விதிகளை மீறுவதாக இருக்கிறது என்று கருத்து தெரிக்கின்றனர் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள்.
லட்சுமிமேனன் உடனான லிப்லாக் காட்சியை விஷால் இழக்க விரும்பாததால் நான் சிவப்பு மனிதன் படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்கவில்லை. அதில் அப்ஸெட்டான விஷால், படம் ரிலீஸ் நேரத்தின்போது மட்டும் விளம்பரங்களில் யுஏ என்ற விவரத்தைப் போடலாம், அதுவரை சென்சார் சர்ட்டிஃபிகேட்டை குறிப்பிட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாராம்.
தப்பாச்சே பாஸ்..!