ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சந்தோஷ்சிவன் இயக்கத்தில் வெளியான படம் இனம். இலங்கைத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்திற்கு உலகத்தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதோடு, தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் வலுத்ததால் திரையிட்ட நான்காவது நாளிலேயே அனைத்து தியேட்டர்களில் இருந்தும் படத்தை திரும்பப் பெற்றார் லிங்குசாமி.
இருப்பினும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் இனம் படம வெளியானது. இதில் அமெரிக்காவில் 14 தியேட்டர்களில் வெளியிடபபட்ட அப்படத்தை அங்கு வாழும் தமிழர்கள் புறக்கணித்து விட்டார்களாம். அதனால் அனைத்து தியேட்டர்களிலும் சேர்த்து மொத்தம் 2385 டாலர்கள் மட்டுமே வசூலானதாம்.
குறிப்பாக அமெரிக்காவின் பில்பிட்ஸ் என்ற ஏரியாவில் உள்ள தியேட்டரில் எந்த தமிழ் படம் திரையிட்டாலும் வசூல் அள்ளுமாம். ஆனால் இந்த படம் வெறும் 1800 இந்திய ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாம். இந்த படத்தை மொத்தம் 200 பேர்கள் மட்டுமே பார்த்துள்ளார்களாம். அப்படி சென்றவர்களும் படத்தை ரசிக்க செல்லவில்லையாம. இந்த படத்திற்கு தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்திருக்கிறது.அப்படியென்றால் இந்த படத்தில் என்னதான் கதை பண்ணியிருக்கிறார்கள் என்பதை பார்க்க சென்றவர்கள்தானாம்.
ஆக, இனம் படம் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளதால், அடுத்தடுத்து, இலங்கை தமிழர் கதைகளை படமாக்கி காசு பார்க்க நினைத்த சில படாதிபதிகள் பின்வாங்கி நிற்கின்றனர்.