ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹீரோக்களுக்காக படங்கள் ஓடிய நிலை மாறி, கதைகளுக்காக ஓடத் தொடங்கியபோது, பல இயக்குனர்களும், பாடலாசிரியர்களும் ஹீரோக்களாக நடிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அதில் ஓரிருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். பலர் காணாமல் போய் விட்டனர்.
இந்நிலையில, தற்போது இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக களமிறங்கி வருகிறார்கள். விஜய் ஆண்டனி, நான் படத்தையடுத்து பல படங்களில் நடித்து வருவதையடுத்து, பென்சில் படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ்குமார் அடுத்து த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
அவரைத் தொடர்ந்து இப்போது ஹாரிஸ் ஜெயராஜூம் நடிகராகியிருக்கிறார். சமீபகாலமாக இசைப்பயணத்தில் தொய்வு நிலை ஏற்பட்டிருப்பதால், அவரது கவனமும் நடிப்பின் மீது திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள்.
தற்போது ஜீவா- துளசி நாயர் நடித்து வரும் யான் படத்தை இயக்கி வரும் பிரபல கேமராமேன் ரவி கே.சந்திரன், சமீபத்தில் ஒரு விளம்பர படம் எடுத்துள்ளாராம். அதில் ஹாரிஸ் ஜெயராஜ்தான் நடித்துள்ளாராம். அவரது நடிப்பு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததாம். இதுபற்றி சொல்லி சிலர் அவரை உற்சாகப்படுத்தியதன் விளைவு, விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து அவருக்கும் ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் துளிர் விட்டுள்ளதாம்.