ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹைவே படத்திற்கு பிறகு இந்தியாவில் ஆலியாட்டின் கிராப் விண்ணளாவ உயர்ந்து நிற்கிறது. பார்ப்பதற்கு கொஞ்சம் தென்னிந்திய சாயல் இருப்பதால் அவரை எப்படியாவது தமிழ் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று கோலிவுட் இயக்குனர்களும், ஹீரோக்களும், தீவிரமான முயற்சியில் இருக்கிறார்கள்.
கவுதம் மேனன் இயக்கும் அஜீத் படம், ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணைந்துள்ள கத்தி, சூர்யா, லிங்குசாமி இணைந்துள்ள அஞ்சான் படங்களுக்கு ஆலியாபட்டை கேட்ட பிறகே மற்ற ஹீரோயின்களை முடிவு செய்திருக்கிறார்கள். தனுசுக்கு ஆலியாவுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று ஆசை. இதனால் வெற்றிமாறன், தான் தனுசை வைத்து இயக்கப்போகும் படத்துக்காக ஆலியாபட்டை சந்தித்து கதை சொல்லி வந்தார். அப்படி இருந்தும் ஆலியாவின் பக்கம் இருந்து சிக்னல் வரவேயில்லை.
இந்தியில் 3 கோடி சம்பளம் வாங்கும் ஆலியா. தமிழுக்கு 5 கோடி வரை கேட்பார் என்று கூறப்படுகிறது. அதை தருவதற்கும் இங்குள்ள சில தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஆலியாவுக்கு இந்தியில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியமாக இருப்பதால். அவர் தமிழ் பக்கம் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.