ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு உள்ளிட்ட சில இயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படங்களில் எங்காது ஒரு காட்சியில் முகத்தை காட்டிவிடுவார்கள். அதேபோல், தான் இயக்கிய ஏழாம் அறிவு, துப்பாக்கி படங்களில் ஒரு காட்சியில் தோன்றி நடித்த ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது முதன்முறையாக இன்னொரு இயக்குனரான திருக்குமரன் இயக்கியுள்ள மான்கராத்தே படத்தில் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார்.
இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள முருகதாஸ், ஓப்பன் தி டாஸ்மாக் என்ற பாடலில் தோன்றியிருக்கிறார். அதேபோல் இதே பாடலில் படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் தோன்றி நடித்திருக்கிறார்.
இதில், நடிப்பதில் முருகதாசுக்கு ஆர்வம் இல்லாதபோதும், ஏற்கனவே அவர் முகம் காட்டிய ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் என்பதால், அவர் நடித்தால் படம் ஹிட்டாகும் என்ற செண்டிமென்ட்டை மனதில் கொண்டே நடிக்க வற்புறுததினார்களாம். அதன்காரணமாக, இதுவரை மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க விரும்பாத முருகதாஸ், முதன்முறையாக இன்னொரு இயக்குனரின் படத்தில் தலைகாட்டியிருக்கிறார்.