ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாக நடிக்கும் சந்தானம், வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேடத்தில் நடிக்கிறார். அப்படி தண்ணீர் கேன் சப்ளை செய்ய செல்லும்போது பெரும்பாலும் காலி கேன்களை வைத்துதான் லோடு அடித்தபடி நடித்துள்ளாராம். ஆனால் ஒரு காட்சியில் நிஜமாகவே தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக, பல கேன்களை அவரது சைக்கிளில் ஏற்றி விட்டிருக்கிறார்கள்.
அதையடுத்து, அவர் சைக்கிளில் ஏறும் வரை உதவி இயக்குனர்கள் பிடித்துக்கொள்ள பின்னர் சைக்கிளை அழுத்தியிருக்கிறார் சந்தானம். ஆனால், தண்ணீர் கேன்களில் வெயிட் அதிகமாக இருந்ததால், எதிர்பாராதவிதாக பின்புறமாக லோடு இழுத்து விட, பல்டி அடித்து விழுந்திருக்கிறார் சந்தானம். நல்லவேளையாக பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லையாம். ஆனபோதும், சிறிது நேரம் அவரிடம் பதற்றம் காணப்பட்டதாம். அதனால் அதையடுத்து தண்ணீர் வேணாம் என்று காலி கேனே வைத்தே வழக்கம்போல் படமாக்கினார்களாம்.