ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காஞ்சனா படத்திற்கு பிறகு ஒன்பதுல குரு படத்தில் நடித்த லட்சுமிராய்க்கு அதையடுத்து கோடம்பாக்கம் கைகொடுக்கவில்லை. அதனால் கன்னடம், இந்தி என்று படவாய்ப்புகளுக்காக படையெடுத்தவர், அங்கு தன்னை யாரும் கண்டு கொள்ளாததால் மறுபடியும் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார்.
சில படங்களில் இடம்பிடிக்க படுபயங்கரமாக களமிறங்கிய லட்சுமிராய் புது வரவு நடிகைகளின் அதிரடியினால் தோற்றுக்கொண்டேயிருந்தவர், இப்போது அதர்வா நடிக்கும் இரும்புக்குதிரை படத்தை கைப்பற்றி விட்டார். இப்படத்தில் நாயகி வேடத்துக்காகத்தான் முதலில் முண்டியடித்தார் லட்சுமிராய். ஆனால், அதர்வாவுக்கு முன்னாடி அவரை நிறுத்தினால் அக்கா மாதிரி இருப்பார் என்பதால் அதற்கு யாரும் உடன்படவில்லை. அதனால் அந்த வேடம் ப்ரியாஆனந்துக்கு எளிதாக கிடைத்து விட்டது.
அதனால், அதே படத்தில் இன்னொரு வில்லி வேடம் உள்ளது என்று டைரக்டர் சொன்னபோது, அந்த ரோல் பற்றி கேட்ட லட்சுமிராய், அதுவும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதால் உடனே ஒத்துக்கொண்டார். மேலும், பைக் ரேஸை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் பைக் ரேஸராக நடிக்கும் அதர்வாவுக்கு போட்டியாக லட்சுமிராயும் குதிக்கிறாராம். இதற்காக சரியான ட்ரெய்னரை வைத்து 2 வாரங்களாக முறையாக பயிற்சி பெற்று வரும் லட்சுமிராய், விரைவில் பைக் ரேஸ் காட்சிகளில் நடிக்கப்போகிறாராம்.