பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி | ‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி |
முதல்வர் பாராட்டு விழாவில் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன், என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் நடந்த விழாவில் நடிகர் அஜித் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஜித் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் திரைப்படத்துறை கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் திட்டமிட்டு பேசவில்லை. என் மனதில் தோன்றியதை பேசினேன். அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன், என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், நான் உண்மையைத்தான் சொன்னேன். இதை சினிமா உலகில் பலர் ஏற்றுக்கொண்டனர். சிலர் மட்டும் வேறுமாதிரி நினைக்கிறார்கள். நாட்டில் ஒவ்வொரு மக்களும் ஒரு அமைப்பில் இருக்கிறார்கள். அதே போல சினிமா உலகினரும் ஒரு அமைப்பில் இருக்கிறார்கள். இதிலும் பல பிரச்சினைகள் இருக்கிறது. முக்கியமான அரசியல் பிரச்சினைகள் வரும்போது அதை அரசும், அதற்குள்ள அமைப்புகளும் தீர்த்து கொள்ளும். அதற்காக நாம் சிறப்பான அரசியல் அமைப்புகளை பெற்று உள்ளோம். நமது சினிமா சகோதரர்களுக்குள் உள்ள பிரச்சினைகளை நமது அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
முக்கிய பிரச்சினைகளில் சினிமா சம்பந்தப்பட்டவர்களும் தலையிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் நினைக்கின்றனர். மற்றொரு பிரிவினர் இது சினிமாகாரர்களின் வேலை இல்லை என்று நினைக்கிறார்கள். இதற்குள் நாங்கள் சிக்கி இருக்கிறோம். நடிகர் ஒருவர் அரசியலில் காலடி எடுத்து வைத்தால் அவரை தடுக்கிறார்கள். அவரை பரிகாசம் செய்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? உடனே பிராந்திய உணர்வை கிளப்புகிறார்கள். சொந்த மண் எது? மண்ணின் மீது பற்றுதல் இருக்கிறதா? என்று பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும்போது அவர் சிலவற்றில் குரல் கொடுக்கலாம். அவரை ஏன் தடுக்க வேண்டும்.
சொந்த மண் பிரச்சினை எல்லா இடங்களிலும் கிளப்பப்படுகிறது. ரசிகர் ஒருவர் சினிமா பார்க்க அல்லது விளையாட்டுக்களை பார்க்க செல்லும்போது அவர் அருகில் இருப்பவர் யார்? அவர் என்ன நிறம்? என்ன மதம் என்ற எந்த கேள்வியும் எழுவது இல்லை. அதுதான் இந்த கலையின் சக்தி. நடிகர், விளையாட்டு வீரர் யார்? என்று ரசிகர்கள் பாகுபாடு பார்ப்பது இல்லை. எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று பார்ப்பது இல்லை. ரசிகர்கள் பல பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். பல மொழிகளை பேசுபவராக இருக்கலாம் ஆனால் அவர்கள் விளையாட்டு, சினிமா மூலம் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.
கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிரச்சினைகளை பார்க்கும் போது மீண்டும் கேமரா முன்பு நிற்க வேண்டுமா? என்று மனதில் தோன்றுகிறது. சுதந்திரத்தை தடுப்பது போல இருக்கிறது. நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தால் சமூகத்தை பாதிக்கும் என்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதே நடிகர் அரசியலுக்குள் நுழைந்தால், செல்வாக்கை பயன்படுத்தினால் உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கிறார்கள்.
நான் தமிழனாகவே வளர்ந்தேன். தமிழனாகவே என்னை கருதுகிறேன்.
நான் எனது 50வது படமாக தயாநிதி அழகிரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படத்துக்கு பிறகு கார் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன், என்று அஜித் கூறியிருக்கிறார்.
இந்த பேட்டி முதல்வர் கருணாநிதியை அஜித் சந்திப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.