ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா ஒரு முன்னாள் திரைப்பட நடிகை. எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகர், தி.மு.க தலைவர் கருணாநிதி திரைப்பட வசனகர்த்தா. அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக்கும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும், லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தரும் திரைப்பட நடிகர்கள்.
எல்லா கட்சிக்கும் திரைப்பட நடிகர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் எந்தக் கட்சியும் இந்த தேர்தலில் திரைப்பட நட்சத்திரங்களுக்கு சீட் வழங்கவில்லை. இது எந்த தேர்தலிலும் இல்லாத ஒரு ஆச்சர்ய, அதிசயமாகும். நெப்போலியன், சரத்குமார், ராமராஜன் போன்றவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிட்டிருக்கிறார்கள். இந்த முறை யாரும் போட்டியிடவில்லை.
தி.மு.க சார்பில் குஷ்பு தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவார் என்றும், அ.தி.மு.க சார்பில் ராமராஜனுக்கு மீண்டும் சீட் வழங்கப்படலாம் என்றும், சரத்குமார் கட்சி சார்பில் அ.தி.மு.க ஆதரவுடன் ராதிகா சரத்குமார் போட்டியிடலாம் என்றும், மீண்டும் நெப்போலியன் நிறுத்தப்படாலம் என்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன் எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் இந்த தேர்தலில் எந்த திரைப்பட நட்சத்திரமும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிகிறது.
இதற்கு நேர் மாறான சூழ்நிலை மற்ற மாநிலங்களில் நிலவுகிறது. ஹேமமாலினி, நக்மா, குல்பனாக், கிரண்கெர், மூன்மூன்சென், சத்ருகன் சின்ஹா, ராஜ்பாப்பர், ரம்யா உள்பட பல முன்னணி திரை நட்சதிரங்கள் போட்டியிடுகிறார்கள். சினிமாவுக்கு அதிகம் முக்கியத்தும் இல்லாத ஒரிசா, பீகார், குஜராத் மாநிலங்களில் இருந்துகூட திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். சினிமாவும், அரசியலும் கலந்து இருக்கும் தமிழ் நாட்டில் திரைப்பட நட்சத்திரங்கள் போட்டியிடாத இந்த பாராளுமன்ற தேர்தலை அரசியல் பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள்.