ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நான்குமுனை போட்டியில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அதோடு சில கட்சிகள் நடிகர்-நடிகைகளையும் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிமுக சார்பில் நடிகர்கள் ராமராஜன், தியாகு, வையாபுரி உள்பட பல நடிகர்கள் தமிழகத்தின் பல ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபன் என்பவரை ஆதரித்து கடந்த சில தினங்களாக தியாகு, வையாபுரி இருவரும் ஒவ்வொரு கிராமங்களாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்படி அவர்கள் செல்லும் ஊர்களில் பெண்கள் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்து வருகிறார்களாம்.
அப்படி ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு வையாபுரி பணம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதனால், அந்த ஏரியாவைச்சேர்ந்த பறக்கும் படை பிரிவு தாசில்தார் குணசேகரன் வையாபுரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தெடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.