விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
அஜித் போன்ற முன்னணி ஹீரோக்கள் ஒரு தடவை கால்ஷீட் கொடுத்தாலே கடவுளின் வரம் கிடைத்த மாதிரி என்பார்கள் தயாரிப்பாளர்கள். ஏ.எம்.ரத்னத்துக்கோ அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார் அஜித். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஆரம்பம் படத்தில் நடித்த அஜித், தற்போது அதே நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு ஒரு சில தினங்களில் வரவிருக்கும்நிலையில், ஏ.எம்.ரத்னத்துக்கு இரண்டாவதுமுறையாகவும் அஜித் எப்படி கால்ஷீட் கொடுத்தார்? என்ற கேள்வி படத்துறையில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது.
அதானே எப்படி கொடுத்தார்? ஆரம்பம் படம் வெளியாகவிருந்த நேரத்தில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா ஏ.எம்.ரத்னம் பற்றி தவறான செய்திகளை பரப்பி வந்தாராம். அதாவது ஆரம்பம் படம் வெளியான அதேநாளில் ஞானவேல்ராஜாவின் ஆல் இன் ஆல் அழகுராஜா படமும் வெளியானது. அப்போது தியேட்டர்களை புக் பண்ண நடந்த போட்டியில், இந்தப் படத்தோடு ஏ.எம்.ரத்னம் காணாமல் போயிடுவாரு. ஆனா நான் தொடர்ந்து படம் எடுக்கிற புரட்யூஸர். அதனால் என் படத்துக்கு தியேட்டர் கொடுங்க என்று ஏ.எம்.ரத்னம் பற்றி ஞானவேல்ராஜா செய்த பிரச்சாரம் அஜித் காதுக்கு வந்திருக்கிறது. நம்மை வைத்து படம் எடுத்தவருக்கு இப்படியொரு அவமானமா என்று டென்ஷனான அஜித் உடனடியாய் அந்த முடிவை எடுத்தார். சில நிமிடங்களில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் இன்னொரு படம் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதாக அஜித் தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு தகவல் பறந்தது.
ஞானவேல்ராஜா செய்த தீமை ரத்னத்துக்கு நன்மையில் முடிந்திருக்கிறது.