டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் (87) நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார். தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த டி.எம்.எஸ்., உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகி்ச்சை அளித்து வருகிறார்கள். ஞாபக சக்தி குறைந்ததால் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. உடலில் உப்பின் அளவு குறைந்து விட்டதாலும், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாலும் ஞாபக சக்தி குறைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் இப்போது டி.எம்.எஸ். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். நாளை மாலைக்குள் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பவிருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னணி பாடகர்களின் ஜாம்பவானாக திகழ்ந்த டி.எம்.எஸ்., கீத வாரிதி, கற்பகத்தரு இசை மன்னர், தேனிசைத் தென்றல், இசைக் கடல், கலைமாமணி, கீத ரஞ்சன வாரிதி, எழிலிசை மன்னர், இசைச் சக்கரவர்த்தி, பாரதீய இசைமேகம், பாரதிய இசைக் கனல், பாடகர் திலகம், சாதனைச் சக்கரவர்த்தி, கானாமிர்தவர்ஷினி, நவரஸ பாவ நளின கானவர்ஷினி, அருள் இசை சித்தர், கலா ரத்னா, கீதா ரத்னா, பக்தி இயக்கத்தின் தானைத் தலைவர், டாக்டர் குமரக் குரலோன், பக்தி இசைப்பாவலர் உள்ளிட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.