ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு-ஹன்சிகாவின் காதல் கதை கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. வாலு படத்தில் நடிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவே சிம்புவின் நன்னடத்தையை கண்டு தனது மனதை பறிகொடுத்து விட்டதாக சொல்லி டுவிட் செய்திருந்தார். ஆனால், இப்போது வாலு படபிடிப்பு முடிய சிலநாட்கள இருக்கும்போதே அவரிடமிருந்து தான் பிரிந்து விட்டதாகவும் அதே ஹன்சிகாவே டுவிட் செய்திருக்கிறார்.
ஆனபோதும், அதன்பிறகு சிம்புவுடன் இணைந்து நடிக்க அவர் மறுக்கவில்லை. வாலு படத்தில் நடிக்க வேண்டிய கடைசிகட்ட படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துக்கொடுத்துள்ளார். அப்போது, சிம்பு-ஹன்சிகா இருவரும் வழக்கம்போல் ஹாய் சொல்லிக்கொண்டே கேமரா முன்பு வந்திருக்கிறார்கள். ஆனால், பழைய ஒட்டுதல் இல்லையாம்.
இருப்பினும், உள்ளத்தில் வெறுப்பையும், உதட்டில் விருப்பையும் வைத்தபடி கடமைக்காக கனத்த இதயத்துடன் நடித்தார்களாம். கூடவே கட்டிப்புடி காட்சிகளிலும் நடித்திருக்கிறார்கள். ஆனால், நடந்து முடிந்த காதல் பயணம் குறித்து இருவருமே வாய் திறக்கவில்லையாம். அதோடு நடித்து முடித்ததும் ஸ்பாட்டை விட்டு வெளியேறும்போது குட்பை சொல்வது போல் சிம்புவுக்கு பை சொல்லி விட்டு விடைபெற்றாராம் ஹன்சிகா.
ஆனால், இப்படி அவர்கள் ஒட்டாமல் நடித்தபோதும், கடைசியாக அவர்கள் நடித்த காட்சிகளில் காதல் இருக்கிறது, கவிதை இருக்கிறது என்கிறது வாலு டீம்.