ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படம் தற்போது கன்னடத்தில் ரவிச்சந்திரன்-நவ்யா நாயர் நடிப்பில் ரீமேக் ஆகிறது. அதேபோல், தெலுங்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த அதே மீனாவே நடிக்கிறார்.
மேலும், தமிழில் உத்தமவில்லனுக்குப்பிறகு த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்கு மீனா, நதியா, சிம்ரன் என மாஜி ஹீரோயினிகள் பலரும் மோதிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. ஆனால், இப்போது சிம்ரன், கமலுடன் மீண்டும் ஜோடி சேருவதற்காக தான் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்து விட்டார்.
இந்தநிலையில், ஏற்கனவே கமலுடன் அபூர்வ சகோதரர்கள், குருதிப்புனல் உள்பட பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த கெளதமியே கமலுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதனால்தான் மேற்படி நடிகைகள் அனைவரும் போட்டிக்கோதாவில் இருந்து விலகிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.