Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட்டை கலக்கும் கடத்தல் காதல்!

04 மார், 2014 - 17:12 IST
எழுத்தின் அளவு:

இன்றைய தேதிக்கு பாலிவுட்டையே கலக்கிக் கொண்டிருக்கும் படம் ஹைவே. ஜப் வி மெட், ராக் ஸ்டார் படங்களின் மூலம் இந்தி சினிமாவில் டாப்புக்கு வந்த இம்தியாஸ் அலி இயக்கி இருக்கிற படம். ரிலீசான தியேட்டர்களில் அதிரிபுதிரியாக வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. காரணம் காதல், அதுவும் கடத்தல் காதல் கதை. கடத்தியவன் மீது காதல் வரும் சிண்ட்ரோம் டைப் கதை. அதோடு அலியா பட்டின் அழகு.

டில்லியை சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்து பெண் அலியா பட். அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. சின்ன சின்ன விஷயங்களை செய்து பார்த்து சந்தோஷம் அடையும் கேரக்டர் அலியா பட். தான் மணந்து கொள்ள இருப்பவனோடு. காரில் நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். அவளது வருங்கால கணவனும் அவளை காரில் அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். அலியா பட்டின் தந்தையின் தொழில் எதிரிகள் அலியாவை கடத்த சந்தர்ப்பம் பார்த்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு பெட்ரோல் பங்கிலிலிருந்து அவரை கடத்துகிறார்கள்.

கடத்தல் கும்பலில் இருக்கும் ரன்தீப்ஹூடோ (ஹீரோ) போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அலியாவை ஒரு டிரக்கரில் வைத்து ஊர் ஊராக சுற்றுகிறான். பயணங்களில் விருப்பம் உள்ள அலியாவுக்கு தான் கடத்தப்பட்டதையே மறந்து அந்த பயண அனுபவத்தை ரசிக்க ஆரம்பிக்கிறாள். தன்னை எந்த விதத்திலும் துன்புறுத்தாத ரன்தீப் மீது அவளுக்கு அன்பு பிறக்கிறது. சில இடங்களில் போலீஸ் கண்ணில் படாமல் மறைந்து ரன்தீப்பை காப்பாற்றுகிறார். ரன்தீப் கடத்தல்காரனாக மாறியதற்கு அவனது பால்ய பருவத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம்தான் என்பதை அறிந்து அவரை காதலிக்கவே ஆரம்பித்து விடுகிறார்.

6 மாநிலங்களை கடந்து செல்லும் இந்த காதல் கதை, இமய மலையின் உச்சியில் முடிகிறது. அங்குள்ள அழகான குடிசை ஒன்றில் தங்கள் காதல் வாழ்க்கையை துவங்கும் நேரத்தில் யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது படத்தோட சஸ்பென்ஸ்.

அனில் மேத்தாவின் ஒளிப்பதிவில் நாமே டிரக்கரில் பயணிப்பது போன்ற உணர்வை பெற முடிகிறது. ஒரே உடையில் அதுவும் அழுக்கு உடையில் அலியாவின் அழகு மனதிற்குள் நுழைந்துவிடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் கலெக்ஷனும் அள்ளுகிறது. விரைவிலேயே தமிழில் யாராவது ரீமேக் செய்வார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in