மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
தெலுங்கில் அல்லரி நரேஷ், பர்ஷானா நடிப்பில் வெளிவந்த சீமா சாஸ்திரி அங்கு சூப்பர் ஹிட்டானது. அதை அப்படியே கன்னடத்தில் சூப்பர் சாஸ்திரி என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். கன்னட பதிப்பில் பிரஜ்வால் தேவராஜும், ஹரிப்ரியாவும் நடித்தார்கள். ரவி-ராஜா என்ற இரட்டையர்கள் இயக்கினார்கள். இவர்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்.
இப்போது சூப்பர் சாஸ்திரியை தமிழில் டப் செய்கிறார்கள். சுப்பிரமணிய சாஸ்திரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கதை பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தின் கதை மாதிரிதான்.
ஆச்சாரமான சாஸ்திரி வீட்டு பெண்ணை காதலிப்பார் ஹீரோ. கண்டிப்பான குடும்பம் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறது. இதை அறிந்து சாஸ்திரி வீட்டு மகனாக மாறி ஹீரோ அந்த வீட்டுக்குள் நுழைந்து அனைவரது அன்பையும், கவனத்தையும பெற்று காதலியை கைபிடிக்கிற கதை. முழு நீள காமெடிப் படம்.