ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் அடுத்து டானா என்ற படத்தை இயக்குகிறார். எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு கொலவெறி அனிருத் இசையமைக்கிறார். ஆனால், ப்ரியாஆனந்துக்கு பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டூயட் பாடுகிறாராம்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன்தான் டானாவாம். டானா என்றால் போலீஸ்காரராம். வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் போலீஸை இப்படித்தான் அழைத்தார்களாம். அதனால் டானா என்றால் என்ன? என்று புரியாமல் தியேட்டருக்குள் வரும் ரசிகர்களுக்கு புரியும் வகையில் ஒரு ப்ளாஸ்பேக்கும் வைத்திருக்கிறாராம் இயக்குனர் துரை. செந்தில்குமார்.
இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களுக்கு தனது பெஸ்ட் இசையை கொடுத்த அனிருத், இந்த படத்திலும் பட்டையக்கிளப்பப்போகிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதால் அனிருத்தும் இசைப்பணிகளை அதிரடியாக துவங்கி விட்டாராம். மான்கராத்தேயில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயனுடன் குத்தாட்டம் போட்டிருக்கும் அனிருத், டானாவிலும் குத்தாட்டம் போட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.