மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ரன்பீர் கபூரும் காத்ரினா கைஃபும் ஆண்டுக் கணக்கில் காதலித்தார்கள். ஒன்றாகவே திரிந்தார்கள். சமீபத்தில்தான் இருவரும் பிரிந்தார்கள். அதேபோல ஹிருத்திக் ரோஷனும் சுசேனா கானும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து 2 குழந்தையும் பெற்றார்கள். இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். விரைவில் விவாகரத்து செய்யப்போகிறார்கள்.
தங்கள் ஜோடிகளை பிரிந்த இருவரும் இப்போது புதிய ஜோடிகளாகி இருப்பதுதான் பாலிவுட்டின் ஹாட் நியூஸ். இருவரும் தற்போது பேங் பேங் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு இடைவெளியில் இருவரும் தங்கள் லவ் பெயிலியரை உருக்கத்துடன் பரிமாறிக்கொள்ள இருவருக்குள்ளும் காதல் தீ பத்திக்கிச்சு என பாலிவுட்டில் பரபரப்பாய் பேசப்படுகிறது.
தனி தனி கேரவனில் இருந்தவர்கள் தயாரிப்பாளருக்கு வீண் செலவு வைக்க வேண்டாம் என்று ஒரே கேரவன் போதும் என்று கூறிவிட்டார்கள். இப்போது ஓட்டல், கிளப், பார்ட்டிகளில் ஒன்றாக வந்து செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மனைவியை வெறுப்பேற்ற ஹிருத்திக் ரோஷனும், ரன்பீரை வெறுப்பேற்ற கத்ரினாவும் இப்படிச் செய்வதாகவும் கூறுகிறார்கள்.