பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிப்பது உறுதியாகிவிட்டது. மலையாள இயக்குனர் ஜீது ஜோசப் படத்தை இயக்கப்போகிறார்.
இதில் கமல் ஜோடியாக நடிக்க நடிகைகளுடன் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. இதில் முதலில் மீனா நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் மீனா த்ரிஷியத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் தமிழில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார். அடுத்து சிம்ரன் என்று கூறப்பட்டது. சிம்ரன் முகத்தில் முதிர்ச்சி வந்துவிட்டதால் கமலே வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.
த்ரிஷா, அசின், தமன்னா போன்ற இளம் நடிகைகளுக்கு கமலுடன் நடிக்க ஆர்வம் இருந்தபோதும் 3 குழந்தைகளின் தாயாக நடிக்க தயக்கமும் இருக்கிறது. இதனால் அவர்கள் விலகிச் செல்வதாக கூறப்படுகிறது தாய்மையும் அழகும் நிறைந்த நடிகை தேவை என்பதால் அப்படி ஒரு நடிகையை வலைவீசித் தேடி வருகிறார்கள்.