மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை, சென்னையிலுள்ள சாலைகளில் டூ-வீலரில் தனது தோழிகளுடன் அவ்வப்போது விசிட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டு வந்தார் த்ரிஷா. ஆனால், நாளடைவில் அவரது முகம் பாப்புலராகி வந்தபோது, தோழிகளுடன் த்ரிஷா,. ஜாலி டூர் செல்வதை கவனித்து விட்ட இளவட்ட ரசிகர்கள், அவர்களை பைக்கில் துரத்தத் தொடங்கினர். அதன்பிறகுதான் அந்த ஜாலி டூர்களை கட் பண்ணினார் த்ரிஷா.
ஆனால், தோழிகளை ஸ்டார் ஹோட்டல்களுக்கு வரவைத்து சந்திப்புகள் நடத்தினார். அம்மா, உதவியாளர்கள் என்று தன்னை சுற்றி கட்டுக்காவல் எதுவும் இல்லாமல், சுதந்திர பறவையாக தோழிகளை சந்தித்த த்ரிஷா, ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப்படுத்தி வந்தார். அப்படி த்ரிஷாவுடன் கூட்டணி அமைத்தவர்களில் பெரும்பாலானோர் அவருடன் படித்தவர்கள் என்பதால், அந்த நட்பை இப்போது வரை தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபகாலமாக சில நடிகைகளையும் தனது ஜாலியோ ஜிம்கானா ஆட்டம் பாட்டத்தில் அவ்வப்போது சேர்த்து வந்த த்ரிஷா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் தனது நீண்ட கால சினிமா தோழியான நயன்தாராவையும் கூட்டு சேர்த்துக்கொண்டு ஆடி அமர்க்களப்படுத்தினாராம். த்ரிஷாவின் இந்த ஜாலியைப்பார்த்த நயன்தாரா, இனிமேல் நாம் அடிக்கடி சந்திப்போம். இதேபோன்று தன்னை மறந்து ஆடி, மனதை ரிலாக்ஸ் செய்வோம் என்று த்ரிஷாவின் நிரந்தர தோழி பட்டியலில் தானும் மெம்பராகி விட்டாராம்.