Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஜூசுந்தரத்துக்குப்பிறகு நான்தான் டேப் டான்ஸ் ஆடியுள்ளேன்! - கார்த்திகா பெருமிதம்

01 பிப், 2014 - 10:47 IST
எழுத்தின் அளவு:

செலக்டீவ்வாக படங்களை பண்ணக்கூடியவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை என்ற சில படங்களை மட்டுமே இயக்கியவர், பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இப்போது புறம்போக்கு என்ற படத்தை இயக்குகிறார். ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி என மூன்று நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், கோ படம் என்னை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நல்லவிதமான அடையாளம் காட்டியது. முதல் படமே மெகா ஹிட்டானதோடு, பாரதிராஜாவின் அன்னக்கொடியில் மிகுந்த நம்பிக்கை வைத்து நடித்தேன். ஆனால், படம் காலைவாரி விட்டது. அதையடுத்து, டீல் என்றொரு படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த நிலையில், கண்ட படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, தரமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்து வந்த நேரம்தான், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. வித்தியாசமான இயக்குனர் என்பதால், நம்பிக்கையுடன் கதை கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விடவும் அற்புதமான கதையாக சொன்னார். அதிலும் என் கேரக்டர் ரொம்ப வித்தியாசமானது. இதுவரை மென்மையான பெண்ணாக நடித்து வந்த நான், இந்த படத்தில் கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

வீடியோ கேம் மூலம் பிரபலமான வீராங்கனை லாரா க்ராப்ட் போன்ற கெட்டப்பில் நடிக்கும் எனக்கு ஆக்சன் காட்சிகளும் உள்ளது. குறிப்பாக, ஒரு பாடலில் டேப் டான்ஸ் ஆடியுள்ளேன். இதற்கு முன்பு தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடன மாஸ்டர் ராஜூசுந்தரம்தான் ஒரு பாடலில் அந்த நடத்தை ஆடியிருந்தார். அதன்பிறகு தமிழில் நான்தான் ஆடுகிறேன்.

ஆக, டேப் டான்ஸ் ஆடிய முதல் தமிழ் நடிகை என்ற பெருமை எனக்கு இந்த படம் மூலம் கிடைக்கப்போகிறது என்கிறார் கார்த்திகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in