ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பைவ் ஸ்டார் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கனிகா, கம்ப்யூட்டர் என்ஜினீயரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலானார். இதற்கிடையில் அம்மணி மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த பழஸிராஜா படம் வெளிவர தயாராகி வருகிறது. அந்த படம் வெளிவருவதற்குள்ளாகவே மலையாளத்தில் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கனிகாவை தேடி வந்தன. இதனால் பிஸியான நடிகையான கனிகா சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தார். தற்போது அவர், டைரக்டர் சத்தியன் அந்திகாடு இயக்கத்தில் ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். படத்திற்கான சூட்டிங் கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்து வருகிறது. இசை நம்ம ஊர் ராஜாதான்!