மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு படங்களில் கொடூரவில்லனாக நடித்தவர் டேனியல் பாலாஜி. தற்போது ஞானகிறுக்கன், வை ராஜா வை படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக வேண்டும் என்கிற டேனியல் பாலாஜியின் ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை. அதனால் டைரக்டராக முடிவு செய்து விட்டார்.
இவர் டைரக்ட் செய்யப்போகும் படத்தின் பெயர் குறோணி. பண்ணையாரும் பத்மினியியும் படத்தை தயாரித்த எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கிறார். டேனியல் பாலாஜிதான் ஹீரோ. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற ஆர்ட்டிஸ்டுகள் செலக்ஷன் நடந்து வருகிறது.
"குறோணி என்றால் அசுரன் என்று பொருள். வாழ்க்கை என்பது நம்பிக்கை என்ற ஒரு சொல்லில்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கை பொய்யாகும்போதுதான் மனிதன் அசுரன் ஆகிறான். எந்த இடத்தில் நம்பிக்கை பொய்யாகிறது. மனிதன் அசுரன் ஆனால் என்ன ஆகும் என்கிற கதை. ஆர்ட்டிஸ் செலக்ஷன் முடிந்ததும் ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறோம்" என்கிறார் டேனியல் பாலாஜி.