Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவின் மனித நேயம் தொடருது...!

28 ஜன, 2014 - 17:50 IST
எழுத்தின் அளவு:

நடிகைகள் நடிப்பை ஒரு பக்தியாக கொண்டு இருந்தாலும், பிற சமூக விஷயங்களில் ஆர்வமாக இருக்கும் நடிகைகள் வெகு சிலர் தான். சமீபகாலமாக ஹன்சிகாவின் சமுக ஆர்வம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஏழை குழந்தைகள் சிலரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வருகிறார். அப்படி இவர் இதுவரை 24 குழந்தைகளை தத்து எடுத்து அவர்களின் முழு படிப்பு செலவையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் அம்மாவிற்கு ஒரு போன் வந்திருகிறது. அப்போது புனேயில், பாலமந்திர் பள்ளியில் 8வது படிக்கும் மாணவன் கார்த்தி, அவர் தாய் தந்தைக்குள் ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்து வாழ்கின்றனர். மாணவனை அப்பாவின் தங்கை எடுத்து வளர்த்து வருகிறார். தற்போது அவருக்கு கேன்சர் நோய் வந்து பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மாணவனை படிக்க வைக்க பராமரிக்க முடியாத சூழ்நிலை என்று கூறியிருக்கிறார். ஹன்சிகாவின் அம்மாவும், ஹன்சிகாவுக்கு சொல்லியிருகிறார். தனது நண்பர்கள் சிலரை புனேக்கு அனுப்பி உண்மை நிலவரத்தை விசாரிக்க சொல்லிருக்கார். அங்கு இருக்கும் அந்த சூழல் உண்மை என்று தெரிந்ததும், அந்த மாணவன் படிக்கும் பள்ளிக்கு தொடர்பு கொண்டு பேசி படிப்பு நிற்க வேண்டாம், அந்த மாணவனின் படிப்பு செலவு மற்றும் அவனின் பராமரிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஹன்சிகா பேசியுள்ளார். இதன்மூலம் அவர் தத்தெடுத்த குழந்தைகள் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது.

இதுப்பற்றி ஹன்சிகாவிடம் நாம் பேசியபோது, இந்த செய்தியை சொன்னவர், ஒரு நடிகையாக நான் இதை செய்வது முக்கியம் அல்ல, சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இதைப்போல குழந்தைகள் கல்வி, ஏழை குழந்தைகளை தத்து எடுத்து படிக்க வைப்பது, அவர்களை பராமரிப்பது என்று செய்வது சமூகத்தையே மாற்றும், இது ஒருவரின் கடமை, பொறுப்பு, இதை நான் செய்வதால் மன நிறைவோடு இருக்கிறேன், நீங்களும் செய்து பாருங்கள் என்றார்.

வாழ்த்துக்கள் ஹன்சிகா, தொடரட்டும் உங்கள் சமூக சேவை!!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in