இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கயிருந்த சூர்யா கைவிட்ட நேரம், அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்ற கெளதம்மேனனுக்கு கைகொடுத்தார் சிம்பு. அந்த படத்தை தானே தயாரிக்கும் கெளதம், படப்பிடிப்பை தொடங்கி விட்டால் பைனான்ஸ் பிரச்னைகள் எளிதில் கிடைத்து விடும் என்று நினைத்திருந்தாராம். ஆனால் இரண்டு வாரங்கள் கால்சீட் கொடுத்து சிம்பு நடித்து விட்டபோதும் பைனான்ஸ் பிரச்னைகள் கைக்கு வரவில்லையாம். அதனால் அடுத்தபடியாக சிம்பு, வாலு மற்றும் பாண்டிராஜ் இயககும் பட வேலைகளில் இறங்கி விட்டார்.
இந்தநிலையில், பிப்ரவரி 6-ந்தேதி முதல் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெறவிருப்பதால், இப்போது கெளதம்மேனனின் மொத்த கவனமும் அஜீத் படத்தில் திரும்பியுள்ளதாம். அப்படத்துக்கு பைனான்ஸ் ரெடியாக இருப்பதால், அஜீத் படத்தை இயக்கிக்கொண்டே இடையிடையே சிம்பு நடிக்கும் படத்தை நகர்த்தலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
ஆனால், கெளதம்மேனனுக்கு பைனான்ஸ் தருவதாக வாக்களித்திருந்தவர்கள், கடைசி நேரத்தில் கைவிரித்ததற்கு, இரண்டு தயாரிப்பாளர்கள், அவர் மீது பண மோசடி செய்து விட்டதாக புகார் செய்ததே காரணம் என்று கூறப்படுகிறது.