சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு 60வயது ஆனதையொட்டி அவர் தனது மனைவி ராதிகாவுடன் மயிலாடுதுறையை அடுத்த திருக்கடையூர், அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இந்த கோயிலில் 60, 80 மற்றும் 100 வயது பூர்த்தியானவர்கள் விஷேச பூஜை செய்வது வழக்கம். அதன்படி சரத்குமாரும் தனது வயது 60-ஆனதையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் செய்தார். கோவிலில் உள்ள நந்தி மண்டபத்தில், 16 கலசம் வைத்து, உக்ர ரத சாந்தி ஹோமம் செய்தார். அப்போது சரத்குமார், ராதிகா இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் கோயில் சார்பில் அவர்களுக்கு மரியாதையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, நடிகை நிரோஷா ஆகியோர்களுடன் சமத்துவ மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் கலந்து கொண்டனர்.