வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
பீட்சா படத்தில் நடித்த மலையாள நடிகை ரம்யா நம்பீசன், பல படங்களில் நடித்துவிட்ட போதும், எந்த படத்திலும், அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தபாடில்லை. ஆனால், அவர் பின்னணி பாடிய படங்கள், ஹிட்டாகி பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. பாண்டிய நாடு படத்தில் பாடிய பை பை பை கலாய்ச்சி பை என்ற பாடல், தமிழில் மெகா ஹிட்டாக அமைந்துள்ளது. இதைஅடுத்து, அவரை நடிப்பதற்குஅழைப்பதை விட, பின்னணிபாடுவதற்குத் தான் அதிகமாகஅழைக்கிறார்களாம். அதோடு, அவர் பொது இடங்களுக்கு செல்லும்போது, சில ரசிகர்கள் அந்த பாடலை பாடி, ரம்யாவை கலாய்க்கவும் செய்கிறார்களாம். இதை சந்தோஷமாக கூறும் அவர், நான் சினிமாவுக்குள் பாடகியாகத் தான் வந்தேன். ஆனால், சூழ்நிலை நடிகையாக்கிவிட்டது. அதனால், நான் ஆசைப்பட்ட இசைத் துறையே, இப்போது என்னை ஆதரித்திருப்பது, என் கனவு நனவானது போல் உள்ளது என்கிறார்.