ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் காயமடைந்து, மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த, சென்னை எக்ஸ்பிரஸ் படம் சக்கபோடு போட்டு வசூலையும் வாரி குவித்தது. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக தற்போது பாராகானின், 'ஹேப்பி நியூ இயர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதில் ஷாரூக்கானும் பங்கேற்று நடித்தார். அப்போது எதிர்பாரதவிதமாக ஒரு பெரிய பலகை ஒன்று ஷாரூக்கானின் மேல் விழுந்தது. இதில் அவரது தலை மற்றும் முகத்தில் அடிப்பட்டு, ரத்தமும் வந்தது. வலியால் துடித்த ஷாரூக்கான், உடனடியாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து சிறிய காயம் தான் என்று கூறியுள்ளனர். ஷாரூக்கானுக்கு ஏற்பட்ட சிறிய விபத்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.