ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாஜி நடிகை ராதாவின் மகளான கார்த்திகா, 'கோ, அன்னக்கொடி' படங்களை அடுத்து 'வா, புறம்போக்கு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'புறம்போக்கு' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கார்த்திகாவுக்கு, தைரியமான பெண் வேடமாம். அந்த படத்தில், ஒரு வித்தியாசமான பாடலுக்கு, கார்த்திகாவை நடனமாட வைக்கப் போகின்றனராம். இந்த நடனத்துக்கு, 'டேப் டான்ஸ்' என, பெயர் சூட்டியுள்ளனர். இது, மேற்கத்திய நடனத்துடன், கதக், குச்சிபுடி, பரதநாட்டியம் போன்ற இந்திய நடனங்களையும் கலந்ததாக இருக்குமாம். இந்த நடனம் இது குறித்து கார்த்திகாவிடம் கூறியபோது, அதிக ஆர்வத்துடன் ஒரே வாரத்தில், அந்த நடனத்தை பயிற்சி எடுத்துவிட்டாராம். தமிழ் சினிமாவுக்கு, இந்த நடனம், புதுமையாக இருப்பதோடு, 'டேப் டான்ஸ்' ஆடிய முதல் கோலிவுட் நடிகை என்ற பெயரும், கார்த்திகாவுக்கு கிடைக்கும் என்கின்றனர்.