ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாற்றான், துப்பாக்கியில் பார்த்த காஜல்அகர்வாலை விட, ஜில்லாவில் நடித்திருந்த காஜல் செம க்யூட்டாக இருப்பதாக கோடம்பாக்கத்திலுள்ள சில இளவட்ட ஹீரோக்கள் அவருக்கு போன் போட்டு ஜொள் ஆற்றை ஓடவிட்டுள்ளார்களாம். அவரது நடைஉடை, மேனரிஸம், பர்பாமென்ஸ் என ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு மார்க் கொடுக்கும் அளவுக்கு பேசி, இப்போதையை நடிகைகளில் நீங்கள்தான் க்யூட்டான நடிகை என்று அம்மணியை சிலிர்க்க வைத்து வருகிறார்களாம்.
இதனால், சொக்கிப்போகும் காஜல், இதுவரை தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்து விட்டேன். ஆனால், கோலிவுட்தான் எனக்குள் இருக்கும் திறமையை வெளிச்சம் போடுகிறது. அதோடு, இங்குள்ள டைரக்டர்களும், கேமராமேன்களும் என் அழகை ரசித்து படமாக்குகிறார்கள். அதனால்தான், மற்ற மொழிகளைவிட தமிழ்ப்படங்களில் நான் ரொம்ப ப்ரைட்டாக தெரிகிறேன் என்கிறாராம்.
அதோடு, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நீங்களெல்லாம் எனக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தால், கோடம்பாக்கத்தில் நிலையான நடிகையாகி விடுவேன் என்றும் சிபாரிசு கோருகிறாராம். இதனால் இத்தனை நாளும், நயன்தாரா, அனுஷ்கா என்று ஜோடி போட்டுக்கொண்டிருந்த அந்த ஹீரோக்கள், அடுத்து க்யூட் காஜலுடன் டூயட் பாடுவதற்காக, தாங்கள் நடிக்கும் படங்களில் அவரது பெயரை முன்வைக்கிறார்களாம்.
இதனால், கோலிவுட்டில் மார்க்கெட் நிலவரம் சரியில்லை என்று ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்த காஜல்அகர்வால், தனக்கு இங்கு ஒளிமயமான எதிர்காலம இருக்கிறது என்பதை உணர்ந்து, அடுத்து கோடம்பாக்கத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் யோசனையில் உள்ளாராம்.