பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் | தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கும் கன்னட ஹீரோயின்கள் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு வீரம் படத்தில் அஜீத், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து நடித்தார். அவரது அந்த நடையும் வேஷ்டியை மடித்துக்கட்டும் ஸ்டைலும் அவரது ரசிகர்களுக்கு மட்டுல்ல, கிராமத்து இளைஞர்களுக்கும் ரொம்பவே பிடித்து விட்டது. வேஷ்டியிலிருந்து பேண்ட்டுக்கு மாறிக் கொண்டிருந்த இளைஞர்கள் இப்போது வேஷ்டிக்கு திரும்புவதை காண முடிகிறது.
தூய வெள்ளை வேஷ்ட்டி, சட்டை அணிவதை மரியாதையான ஒரு உடை என்பதை உணரத் தொடங்கி விட்டார்கள். அதனால் இப்போது கடைகளில் வேஷ்ட்டி விற்பனை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். இந்த ஆண்டு பொங்கலுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வேஷ்ட்டி விற்பனை நடந்ததாக கூறுகிறார்கள். அதோடு தற்போது வேஷ்ட்டி தயாரிப்பு நிறுவனங்கள் வீரம் வேஷ்டி, அஜீத் வேஷ்டி, தல வேஷ்டி என்ற பெயரில் வேஷ்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.