ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இதுவரை லட்சுமிமேனன் நடித்துள்ள எல்லா படங்களிலுமே நடிப்பில் ஸ்கோர் பண்ணியிருப்பார். ப்ளஸ்-ஒன் படிக்கும் 16 வயது பெண்தான் என்றாலும், அவரது மெச்சூரிட்டியான நடிப்பும், உடல்கட்டும் அவரை பல படி மேலே உயர்த்தி விட்டது. அவரைப்போன்ற இளவட்ட நடிகைகளெல்லாம் கவர்ச்சிகரமான கதைகள் தேட, இவரோ, கவர்ச்சிக்கு கட்டிங்போடும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், விஷாலுடன் பாண்டியநாடு படத்தில் டீச்சர் வேடத்தில் நடித்த லட்சுமிமேனன், இப்போது நான் சிகப்பு மனிதன் படத்திலும் அவருடன் நடிக்கிறார். இப்படத்தில் முந்தைய படத்தை விடவும் லட்சுமிமேனனின் திறமைக்கு சவால் விடும் அளவுக்கு வெயிட்டான வேடத்தை கொடுத்திருக்கிறார்களாம்.
பாண்டியநாடு படத்தில் அவரது பர்பாமென்ஸைப்பார்த்த விஷால், இந்த வேடத்தை சுமக்கும் நடிப்பாற்றல் இப்போதைய நடிகை யாருக்கு இருக்கிறது என்று டைரக்டர் திரு பரிசீலனை செய்தபோது, லட்சுமிமேனனால்தான் முடியும் என்றாராம். எத்தனை வெயிட்டான வேடத்தையும் அவர் சேலஞ்சிங்காக எடுத்து செய்வார் என்று முன்மொழிந்தாராம். அதன்பிறகுதான் அவரை புக் பண்ணினார்களாம்.
அதனால், தன் மீது பெரிய நம்பிக்கை வைத்து கொடுத்த படம் என்பதால், இப்படத்துக்காக தனது மொத்த திறமையையும் கொட்டிக்கொடுத்து வரும் லட்சுமிமேனன், சில காட்சிகளில் ஸ்பாட்டில் தன்னைச்சுற்றி நிற்பவர்களே அசந்து போகிற அளவுக்கு ஆக்டிங் கொடுக்கிறாராம். அந்த வகையில், விஷால்-லட்சுமிமேனன் இணைகிற காட்சிகளில் அவர்களுக்குள் நீயா-நானா என்கிற அளவுக்கு நடிப்புப்போட்டியே நடந்து கொண்டிருக்கிறதாம்.