ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்ரீநிகேதன் என்ற துணிக்கடை திறப்பு விழாவிற்கு சென்னை வந்த லக்ஷ்மிராய் இடம் சில கேள்விகள், உங்களுக்கு எது மிக பிடித்தமான உடை என கேட்டபோது எனக்கு பாவாடை தாவணி ரொம்ப பிடிக்கும். புடவை என் பெஸ்ட் சாய்ஸ். நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உடை. உங்களுக்கு பிடித்த நிறம் ? ப்ரைட் கலர் எனக்கு பிடிக்கும் , இப்போ புதிதாக வந்த நியான் கலர், பிங்க் ,ஆரஞ்ச் பிடிச்ச நிறங்கள்.
ஒரு கடை விளம்பரத்திற்கு நடிகைகைகளை பயன்படுத்துவது குறித்து?
நான் முதல் முறையா சென்னைல இப்படி ஒரு ஷாப் ஓபன் பண்ண வந்திருக்கேன், எனக்கு உடைகளில் கொஞ்சம் ஆர்வம் இருக்கு, பெண்கள் என்றாலே உடைகளில் ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள், ரொம்ப வித்யாசமான டிசைன் எனக்கு பிடிக்கும் , ஷாபிங் போறோம்னு சொன்னா அப்டியே ஓடி வந்திடுவோம் , உடைகள் மேல் அவ்ளோ பிரியம் நமக்கு ,இப்டி ஒரு நிருவனத்தோடு சேர்ந்திருப்பது மகிழ்ச்சி .
இப்ப உங்களை அதிகமா படங்களில் பார்க்க முடியவில்லையே?
காஞ்சனா படம் பிறகு நல்ல படங்கள் பண்ண வெயிட் பண்ணேன். சுந்தர்.சி-இன் அரண்மனை படத்தில் நடிக்கிறேன். காமெடி திரில்லர் படம். அப்புறம் அதர்வா கூட இரும்பு குதிரை படம் பண்றேன். படத்தில் பைக் ஓட்டி வர்றேன், இதுக்காக நிறைய பயிற்சி எடுக்கிறேன். இதுவரை இல்லாத அளவு ஒரு புது அவதாரம் இந்த படத்தில எடுத்துருக்கேன்.
இப்பெல்லாம் நடிகைகள் அரசியலுக்கு வரது அதிகமாச்சே உங்களுக்கு ஆர்வம் இருக்கா?
அய்யோ அதுக்குள்ளேவா, இப்போ டைம் இல்ல, எதிர் காலத்தில் பார்க்கலாம், எல்லாரும் வர்றாங்கனு நான் வரமுடியாது , எனக்கு இப்போ என் படங்கள் தான் , என் கவனம் என்று பேசிவிட்டு பிளைட் பிடிக்க பறந்து விட்டார் லக்ஷ்மிராய்.