Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

வசந்த் டி.வி.ஊழியர்கள் கடத்தல்!

09 ஜன, 2014 - 13:02 IST
எழுத்தின் அளவு:

வசந்த் டி.வி. வாய்மையே வெல்லும் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. முன்பு ஜீ தமிழ் டிவியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்த நிர்மலா பெரியசாமி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தனிநபர்களுக்கு இடையேயான குடும்ப பிரச்னையை பேசி பஞ்சாயத்து பண்ணி வைக்கும் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி தயாரிப்பில் பணியாற்றிய வசந்தன், கோபி, நோபல் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வசந்த் டி.வியின் முதன்மை செயல் அதிகாரி அசோகன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குடும்ப தகராறுகளை தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி ஒன்று எங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. சில தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் இருந்து ஒரு பெண் தன்னை ஒருவர் காதலித்து 8 மாத கர்பிணியாக்கி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாகவும். அவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் கூறினார். சம்பதப்பட்ட அந்த பெண்ணையும், அவரது காதலரையும் சைதாப்பேட்டையில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தோம். அப்போது ஒரு கும்பால் எங்களை மிரட்டியது. இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்தோம். இருதரப்பினரும் காவல் நிலையத்திலேயே தகராறு செய்தார்கள். இப்போது எங்கள் ஊழியர்களை அந்த கும்பல் கடத்திச் சென்று 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறது. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்கள் ஊழியர்களை மீட்டுத் தருமாறு கமிஷனிரிடம் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in